யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து புத்தாண்டு நள்ளிரவுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டன. இதற்கான செயல்முறை ஓர் ஆண்டுக்கு முன்னரே முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஐ.நா நிறுவனம் இஸ்ரேல் எதிர்ப்பு பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டியே 2017 ஒக்டோபரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதில் இருந்து விலகின.

யுனெஸ்கோவில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

எனினும் யுனெஸ்கோவின் மொத்த பட்ஜட்டில் அமெரிக்கா 22 வீத பங்காற்றும் நிலையில் அது 600 மில்லியன் டொலர் நிலுவை வைத்துள்ளது. இது அந்த அமைப்பில் இருந்து வலகுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

எனினும் ரீகன் நிர்வாகத்தில் 1984 ஆம் ஆண்டிலும் யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. அந்த அமைப்பு சோவியட் ஒன்றியத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மீண்டும் அந்த அமைப்பில் இணைந்து கொண்டது.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை