அவுஸ்திரேலிய நதிகளில் இறந்து மிதக்கும் மீன்கள்

வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலியாவில் கடந்த ஒருசில தினங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்திருப்பதோடு மேலும் அதிக உயிரிழப்புகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கின் மெனின்டீ நகருக்கு அருகில் இருக்கும் டார்லிங் ஆற்றில் பெரிய விரிப்புப் போன்று வெள்ளை நிறத்தில் மீன்கள் உயிரிழந்து காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களில் இவ்வாறு மில்லியன் கணக்கில் மீன்கள் இறந்துள்ளன.

தாழ்வான மட்டத்தில் உள்ள நீர் மற்றும் குறைந்த அளவான ஒட்சிசன் மற்றும் நச்சுப் பாசிகள் இவ்வாறு மீன்கள் உயிரிழப்பதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்பநிலை அதிகரித்திருப்பது மற்றும் மழையில்லாமை மேலும் மீன்கள் கூட்டாக உயிரிழப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பிராந்தியம் அண்மைய வாரங்களாக இடம்பெற்று வரும் கடுமையான வெப்பம் மற்றும் நீண்ட வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கும் பருவமழையும் சில பிராந்தியங்களில் வெப்ப அலையை ஏற்படுத்த காரணமாகியுள்ளது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை