ஜோர்தான் அமைச்சர் மீது இஸ்ரேல் அரசு முறைப்பாடு

ஜோர்தான் அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் கொடியை மிதிப்பது போன்ற புகைப்படம் வெளியானதை அடுத்து அது பற்றி ஜோர்தான் அரசிடம் இஸ்ரேல் முறையிட்டுள்ளது.

அம்மானில் இருக்கும் வர்த்தக ஒன்றிய வளாகத்தின் வாயில் தரையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய கொடியை மிதித்தபடி ஜோர்தான் தகவல் தொடர்பாடல் அமைச்சர் ஜுமான குனைமத் இருக்கும் படம் ஒன்று கடந்த வாரம் வெளியானது.

எனினும் பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்ரேலிய கொடி அந்த வளாகத்தின் தரையில் பல ஆண்டுகளாக உள்ளது.

எனினும் இது பற்றி விளக்கம் கோரி ஜோர்தான் தூதுவருக்கு இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.

இஸ்ரேல் மற்றும் ஜோர்தானுக்கு இடையில் 1994 ஆம் ஆண்டு அமைதி உடன்படிக்கை செய்து கொண்டபோதும், ஜெரூசலம் விவகாரம் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் முறுகல் அதிகரித்துள்ளது.

எகிப்து தவிர்த்து இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை கொண்டிருக்கும் ஒரே அரபு நாடு ஜோர்தான் ஆகும்.

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை