இந்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

இந்தியாவின் முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான ஜோர்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88) உடல்நலக் குறைவால் டெல்லியில் நேற்றுக் காலமானார்.

ஜோர்ஜ் பெர்னாண்டஸ் 1998-ஆம் ஆண்டு முதல் 2004 வரை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தொலைத்தொடர்புத்துறை, தொழில்துறை, மற்றும் ரயில்வே துறை அமைச்சராகவும் பெர்னாண்டஸ் இருந்துள்ளார். கடந்த 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றியீட்டி மொத்தம் ஒன்பது முறை இந்திய  பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக இவர் பணியாற்றி உள்ளார். நீண்ட நாட்களாக அல்சைமர் (நினைவாற்றலின்மை)நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருந்த பெர்னாண்டஸ், சமீபத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றுக் காலமானார்.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை