கணிதப் பிரிவில் கல்வி கற்பதற்கு பல பாடசாலைகள் என்னை புறந்தள்ளின

அக்கறைப்பற்று ஆர்.கே.எம் பாடசாலையில் பொறியியல் துறைக்குதகுதி பெற்ற மாணவன்

உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்பதற்கு எனக்கு தகுதி இருந்தும் பல பாடசாலைகள் என்னை புறந்தள்ளியது. ஆனாலும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் என்னை உள்வாங்கியது. அதன் மூலம் இன்று நான் பொறியியல் பீடத்திற்கு  தகுதி பெற்று  சாதித்து காட்டியுள்ளேன் என சர்வானந்தம் நிலக்சன் எனும் மாணவன் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். 

வெளியிடப்பட்டுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சையில் 2 ஏ, 1 பி சித்தியை பெற்ற அக்கரைப்பற்று தீவுக்காலை பிரதேசத்தை சேர்ந்த நிலக்சன் எனும் மாணவன்  பொறியியல் பீடத்திற்கு தகுதி பெற்றுள்ளான்.  இம் மாணவனை பாராட்டும் நிகழ்வு  கடந்த (04) பாடசாலையில் நடைபெற்றது. பாராட்டு விழாவின் பின்னர் கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். 

மாணவன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் க.பொ.த.சாதாரண தரத்தில் 3பி, 4 சி, 1 எஸ் பெறுபேற்றை பெற்றேன். ஆனாலும் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்பதற்கு ஆசைப்பட்டேன். எனது ஆசைக்கு எந்தப் பாடசாலையும் இடந்தரவில்லை. இறுதியாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகா வித்தியாலய அதிபரை சந்தித்து எனது எண்ணத்தை வெளியிட்டபோது அதற்கான அனுமதியை வழங்கினார் என குறிப்பிட்டார்.

(வாச்சிக்குடா விஷேட நிருபர்) 

Mon, 01/07/2019 - 12:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை