டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கு; கோத்தாபய நீதிமன்றில் முன்னிலை

Rizwan Segu Mohideen
டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கு; கோத்தாபய நீதிமன்றில் முன்னிலை-D A Rajapaksa Museum Scam-Gotabaya Case Gotabaya Appeared Before Special High Court

இன்று முதல் தினமும் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (17) விசேட மேல் நீதிமன்றத்தில் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் 04 ஆம் திகதி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

மெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது ரூபா 33 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/22/2019 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை