இராட்சத சுறா அவதானிப்பு

உலகின் மிகப் பெரிய சுறாக்களில் ஒன்றை அமெரிக்காவின் ஹவாயி தீவுகளுக்கு அருகே சுழியோடிகள் சிலர் கண்டுள்ளனர். அதன் நீளம் 20 அடிகளாகும். 50 வயது மதிக்கத்தக்க அந்தச் சுறாவின் எடை சுமார் 2.5 தொன்கள் என கருதப்படுகிறது.

கிரேட் வைட் வகையைச் சேர்ந்த அந்தப் பெண் சுறா கடந்த செவ்வாய்க்கிழமை ஒவாஹு) தீவுக்கு அப்பால் காணப்பட்டது.

உயிரிழந்த திமிங்கிலத்தின் சடலத்தை உண்டுகொண்டிருந்த சுறாமீன் கூட்டத்திற்கிடையே அதனை சுழியோடிகள் அடையாளங்கண்டனர். அது கர்ப்பமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். கிரேட் வைட வகை சுறாமீன்களை ஹவாயி தீவுகளுக்கு அருகே காண்பது அரிது. கடல் நீர் வெப்பமாக இருப்பதால் அவை அங்கு அவ்வளவாகச் செல்வதில்லை. இந்த இராட்சத சுறா 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட டீப் புளு போன்ற சுறா என்று நம்பப்படுகிறது.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை