அட்டாளைச்சேனையில் விளையாட்டு வீரர்கள் கெளரவிப்பு

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கூட்டம் அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கூட்ட மண்டபத்தில் கழகத் தலைவர் அறூஸ் தலைமையில் இடம் பெற்றது.

சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.றஸீன், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.அஸ்வத், கிராம சேவகர் முபீஸ், அமைப்பாளர் அஸ்வர், சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எப்.நவாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு 2019ம் வருடத்தி்கான லக்கி விளையாட்டுக் கழகத்ததின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதேச மட்டத்திலும்,மாகாண மட்டத்திலும் 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரா்கள் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக பல வருடங்கள் மிகச்சிறப்பாகக் கடமையாற்றி விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள ஏ.எம்.எம்.றஸீனை பாராட்டிக் கௌரவித்து லக்கி விளையாட்டுக் கழகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

நினைவுச் சின்னத்தை சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் மாவட்ட பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.எம்.றஸீனுக்கு வழங்கி வைத்தார்.

லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவராக அறூஸ் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக எம்.சி.ஹிம்ராசும், பொருளாளராக யூ.எல்.முனாப் மற்றும் அமைப்பாளராக அன்ஸாரும், உப தலைவராக எஸ்.நவாஸூம் தெரிவாகியதுடன் விளையாட்டுக் குழுக்களின் தலைவர்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முதலாவது விளையாட்டுக்கழகமான லக்கி விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது வருடங்களை கடந்துள்ள நிலையில் தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் பல சிறந்த வீரா்களை மெய்வல்லுனர் துறையில் உருவாக்கியுள்ளது.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்) 

 

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை