உணவுக்கு முண்டியடித்து மலேசியாவில் இருவர் பலி

இலவச உணவு கூப்பன்களை பெறுவதற்கு முண்டியடித்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் மலேசியாவில் இரண்டு முதிய பெண்கள் பலியாகியுள்ளனர். தலைநகர் கோலாலம்பூரில் புது மாவட்டத்தில் உட்புற சந்தை ஒன்றில் வழங்கவிருந்த மொத்தம் 200 இலவச கூப்பன்களுக்கு 1,000க்கு மேற்பட்டோர் குழுமியிருந்தனர்.

மக்களின் கூக்குரலை கேட்டதாகவும், மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து தள்ளியதை பார்த்ததாகவும் பாதுகாப்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

78 வயதான லா லொன் நாங் மற்றும் 85 வயதான அக் போக் இருவரும் இலவச கூப்பன்கள் பெறுவதற்கான தங்களின் முறை வந்தபோது மூச்சுத்திணறி மயங்கியதாக நம்பப்படுகிறது.

‘அடுத்த வாரம் வரவிருக்கும் சந்திர நாட்காட்டியின் படியான புத்தாண்டை முன்னிட்டு இந்த கூப்பன் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது’ என்று இந்த சம்பவம் நிகழ்ந்த புது ஒருங்கிணைந்த வணிக வளாகத்தின் அதிகாரி ‘த ஸ்டார்’ என்ற ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை