அயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ் மற்றும் அக்தாப்

Azaff Mohamed
அயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ் மற்றும் அக்தாப்-Mohamed Shiraz Included in SL A Team for Ireland Tour

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அயர்லாந்து A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளுக்கான இலங்கை குழாமில் மொஹம்மட் சிராஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான சிராஸ் கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.

BRC அணிக்காக விளையாடி வரும் சிராஸ் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மேஜர் எமர்ஜிங் லீக் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ரி20 போட்டிகளில் ஜோன் கீல்ஸ் அணிக்காக விளையாடிய சிராஸ் 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற 23 வயதின் கீழான மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் தவிர உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் பெத்தும் நிசங்க, ஹசித பொயேகொட, கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்கவும் உபதலைவராக மிலிந்த சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக அஷான் பிரியஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது பயிற்சிப்போட்டியின் தலைவராக ஹசான் துமிந்து நியமிக்கப்பட்டுள்ளதுடன் பயிற்சிப் போட்டிகளுக்காக வலது கை வேகப்பந்து வீச்சாளரான அக்தாப் காதர் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு நாட்களைக் கொண்ட  பயிற்சிப்போட்டி இன்று (01) மற்றும் நாளைய (02) தினங்களில் கட்டுநாயக்கவில் இடம்பெறுகின்றது.

தொடர் அட்டவணை

  • முதலாவது டெஸ்ட் போட்டி - ஜனவரி 05 - 08, SSC மைதானம் கொழும்பு
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஜனவரி 13-16, அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானம்
  • முதலாவது ஒருநாள் போட்டி - ஜனவரி 19, அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜனவரி 21, அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானம்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - ஜனவரி 24, SSC மைதானம் கொழும்பு
  • நான்காவது ஒருநாள் போட்டி - ஜனவரி 26, SSC மைதானம் கொழும்பு
  • ஐந்தாவது ஒருநாள் போட்டி - ஜனவரி 29, SSC மைதானம் கொழும்பு

உத்தியோகபூர்மற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை A குழாம்
அஷான் பிரியன்ஞன் (அணித்தலைவர்), அஞ்செலோபெரேரா –(பிரதி அணித்தலைவர்), அவிஷ்க பெர்னாந்து, லஹிரு மிலன்த, ஹசித போயகொட, பெதும் நிஸங்க, சம்மு அஷான், கமிந்து மெண்டிஸ், மிலிந்த சிறிவர்த்தன, மனோஜ் சரச்சந்திர, லசித் எம்புல்தெனிய, நிஷான் பீரிஸ், அமில அபொன்சோ, நிசால தாரக்க, சாமிக்ககருணாரத்ன, செஹான் மதுசங்க, மொஹமட் சிராஸ், திலேஷ் குணரத்ன

உத்தியோகபூர்மற்ற ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை A குழாம்
உபுல் தரங்க (அணித்தலைவர்), மிலிந்த சிறிவர்த்தன, அவிஷ்க பெர்னாந்து, சந்துன் வீரக்கொடி, சம்மு அஷான், கமிந்து மெண்டிஸ், செஹான் ஜயசூரிய, லசித்எம்புல்தெனிய, ரமேஷ் மெண்டிஸ், அமில அபொன்சோ, ஜீவன் மெண்டிஸ், சமிக்க கருணாரத்ன, அசித்தபெர்னாந்து, ஜெஹான் டேனியல், இசுரு உதான, இசான்ஜயரட்ன

Tue, 01/01/2019 - 20:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை