எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் ஒரே கட்சிக்கு

Maheshwaran Pirassath
எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் ஒரே கட்சிக்கு ஆர் சம்பந்தன்-President and Opposition Same Party-Unacceptable-R Sampanthan

மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைமை வழங்கியிருப்பது முரணான செயல்

அரசின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் நிலையில் அதேகட்சியைச் சார்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியிருப்பது முரண்பாடான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (25) ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் ஒரே கட்சிக்கு ஆர் சம்பந்தன்-President and Opposition Same Party-Unacceptable-R Sampanthan

அரசியலமைப்பில் சிறுபான்மை கட்சிகளிற்கும் சிறுபான்மை மக்களிற்கும் உள்ள உரித்தானது பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளி கட்சியான இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவராவார். எனவே, தற்போதைய  ஜனாதிபதி பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் அமைச்சராகவும், அமைச்சரவையின் தலைவராகவும், நிறைவேற்றின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் அங்கத்தவராக இருக்கின்ற காரணத்தினால் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பதிலும் பொறுப்பும் கூறவேண்டிய ஒருவராக இருக்கின்றார்.

இது முரண்பாடானது என்பதை கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம ஊடகமொன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை முரண்பாடானதாகும் என சுட்டிக் காட்டினார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

Fri, 01/25/2019 - 15:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை