பலஸ்தீனத்திற்கான அமெரிக்க பாதுகாப்பு உதவிகள் நிறுத்தம்

 

பலஸ்தீன அதிகாரசபைக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உதவிகள் இன்று முடிவுக்கு வரவுள்ளது.

இவ்வாறு பலஸ்தீனத்திற்கான 60 மில்லியன் டொலர் இழப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரசு மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக உள்ளதோடு ஆக்கிரமிப்பு மேற்கக் கரையில் இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை பலவீனப்படுத்துவதாகவும் உள்ளது.

இன்று ஜனவரி 31 ஆம் திகதி இந்த நிதியை கைவிட ஜனாதிபதி அப்பாஸ் முடிவெடுத்தபோதும் அதனை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு பலஸ்தீன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் 2017 டிசம்பரில் ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்ததை தொடர்ந்து அமெரிக்காவை பலஸ்தீனம் புறக்கணித்து வருகிறது.

அப்பாஸ் நிர்வாகத்தை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பச் செய்ய அழுத்தம் கொடுக்கும் வகையில் பலஸ்தீனத்திற்கான பல நூறு மில்லியன் டொலர் உதவிகளை அமெரிக்கா முடக்கியமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை