சிங்கப்பூரில் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் விபரம் கசிவு

சிங்கப்பூரில் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் 14,000 க்கும் அதிகமானவர்களின் இரகசியமான தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டு இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன.

நோயாளிகளின் பெயர்கள், அடையாள அட்டை எண்கள், தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி, எச்.ஐ.வி கிருமி சோதனை முடிவுகள் ஆகிய தகவல்கள் கசிந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இரகசியத் தகவல்களைப் பெறும் அதிகாரத்தில் இருந்த அமைச்சின் முன்னாள் அதிகாரி ஒருவர், முறைகேடாக அந்தத் தகவல்களைப் பெற்றதுபோல் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் கடந்த 2013 ஜனவரி வரையில் 5,400 சிங்கப்பூர் நட்டவர் மற்றும் 8,800 வெளிநாட்டினர்களின் தகவல்கள் கசிந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2015 வரை எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் சிங்கப்பூருக்கு ஒரு சுற்றுலா பயணியாக வருவதும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொழில் புரிய வருபவர் உட்பட 90 நாட்களுக்கு மேல் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாயின் அவர்களுக்கு எச்.ஐ.வி இல்லை என்பதை உறுதி செய்ய மருத்துவ சோதனைக்கு உள்ளாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை