தெரேசா மே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

AMF

எதிராக 325 வாக்குகள் 

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று நடந்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக 325 வாக்குகள் அளிக்கப்பட்டு தோல்வியடைந்துள்ளது. இதற்கு ஆதரவாக 306 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடப்பதற்கு முன்னர் நேற்று (16) தெரேசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை சில ஆளுங்கட்சி எம்பிக்கள் மற்றும்  எஸ். என். பி உள்ளிட்ட சில எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பும் இணைந்து தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுக்க தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி, ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்று எம்பிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

Thu, 01/17/2019 - 08:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை