ஊக்குவிப்பு தொகையை மீள வழங்க தவறினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேற நேரிடும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையை ஆறுமுகன் தொண்டமானும் வடிவேல் சுரேசும் காட்டிக்கொடுத்தாக குறிப்பிட்ட பழனி திகாம்பரம், வெறும் 20 ரூபா மாத்திரமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் இதற்கு முன்னர் வழங்கிய 140 ரூபா ஊக்குவிப்பு தொகையை மீள வழங்க வேண்டும். பிரதமரை சந்தித்து இது பற்றி பேச இருக்கிறோம். பிரதமருடனான கலந்துரையாடலின் போது 140 ரூபா ஊக்குவிப்புத் தொகையை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம்.

இதனை வழங்க முன்வராவிட்டால் 6 உறுப்பினர்களும் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா, இல்லை என தீர்மானிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சு பதவிகளை கைவிடவும் தயார் என்று குறிப்பிட்ட அவர் இந்த அரசிற்காக அர்ப்பணித்த தங்களை மறந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் கூறினார்.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை