மசடோனியா பெயரினால் கிரேக்க அரசில் பிளவு

மசடோனியா தனது நாட்டின் பெயரை மாற்றியதால் கிரேக்க நாட்டின் கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மசடோனியாவின் பெயரை மாற்றுவது தொடர்பில் கடந்த ஜுனில் கிரேக்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சர் பனோஸ் கம்மனோஸ் மற்றும் அவரது சுதந்திர கிரேக்கக் கட்சி அரசில் இருந்து விலகியுள்ளது.

இதனை அடுத்து ஆளும் கூட்டணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. 300 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி 145 இடங்களை பெற்றிருக்கும் நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெக்கத்துடனான உடன்படிக்கைக்கு அமைய மசடோனியா தனது நாட்டின் பெயரை வடக்கு மசடோனியா என்று மாற்றுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குகள் கிடைத்துள்ளன.

எனினும் மசடோனியா என்ற பெயர் தனது நாட்டின் மாநிலத்திற்கு உரித்தானது என்று கிரேக்க தேசியவாதிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

1991 ஆம் அண்டு யுகோஸ்லாவியாவில் இருந்து மசடோனியா சுதந்திரம் பெற்றது தொடக்கம் இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை