கிரிக்ெகட் குழுவில் வீரர்களை இணைக்கக் கோரி இலஞ்சம் வழங்க பலர் முன்வந்தனர்

இலங்கை கிரிக்ெகட் குழுவில் விளையாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி பலர் தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

இதேவேளை தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்த சந்தர்ப்பம் தொடர்பில் தான் சர்வதேச கிரிக் ெகட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலிடம் கடந்த புதன்கிழமை (16) முறைப்பாடு செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று முன்தினம் வியாழக்கிழமை (17) சமூக வலைத்தளங்களுக்கூடாக வழங்கிய நேரடி செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் இலங்கை கிரிக்ெகட்டில் இடம்பெற்று வரும் ஊழலை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

"இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச கிரிக்ெகட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலிடம் முறையிட்டபோது அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். நானும் இதே அதிர்ச்சிக்குத்தான் உள்ளாகினேன். ஒரு நிமிடம் என்னை யாரோ ஆபத்தில் மாட்டிவிட பார்ப்பதாகவே நானும் எண்ணினேன். இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் எமது வரலாற்றில் இடம்பெற்றதேயில்லை," என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் மோசடிகளை தவிர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய விளையாட்டுச் சட்டத்தின் நகல் எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படால் 03 மாதத்திலிருந்து 05 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் 05 இலட்சம் முதல் 05 மில்லியன் வரையான தண்டப்பணமும் அறவிடப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் இலங்கை கிரிக்கட் சபையில் இடம்பெற்று வரும் ஊழல் தொடர்பில் தகவல்களை முன்வைக்குமாறு விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவு வழங்கியுள்ள கால அவகாசம் வெற்றியளித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

 

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை