சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேற புதிய நிபந்தனைகள்

சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுவது சில நிபந்தனைகளில் தங்கி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், இந்த செயற்பாடு தாமதமடையும் சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போல்டன், வடக்கு சிரியாவில் குர்திஷ்களின் பாதுகாப்பு குறித்து துருக்கியின் உத்தரவாதத்தை கோரியதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று இஸ்ரேல் பாதுகாப்பு குறித்தும் உறுதி செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் எஞ்சிய பகுதிகளும் தோற்கடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அமெரிக்க துருப்புகள் எப்போது வாபஸ் பெறுவது என்பது பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் போல்டனின் அறிவிப்பு துருப்புகள் வாபஸ் பெறுவது தாமதமாகும் என்பதை உறுதி செய்வதாக உள்ளது.

Tue, 01/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை