பத்தாவது தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று மாணவர் சாதனை

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை(12) நடைபெற இலங்கை சோடோகான் கராத்தே சம்மேளனத்தின் பத்தாவது தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மாணவரும் ராம் கராத்தே தோ சங்கத்தின்(ஆர்.கே.ஓ) உறுப்பினருமான எஸ்.ஏ.சர்ராஜ் முகம்மட் தனிக் குமித்தே(சண்டை), குழுக்காட்டா ஆகிய போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இரண்டு தங்கப் பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அத்தோடு தனிக்காட்டா போட்டியில் இரண்டாமிடத்தினையும் பெற்று வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளதோடு, இருபது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான சம்பியன் கிண்ணத்தினையும் சுவீகரித்துக் கொண்டார்.

இம்மாணவருக்கு பரிசளிக்கும் வைவபம் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது இலங்கை சோடோகான் கராத்தே சம்மேளனத்தின் நிருவாகிகள் கலந்து கொண்டு பரிசில்களையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.

இம்மாணவர் ஏலவே பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.

இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மாணவர் சிலரும் பல்வேறு பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.

பி.சரோன் சச்சின் காட்டா, குழுக்காட்டா ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், எஸ்.திசோபன் குமுத்தே, குழுக்காட்டா ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், தனிக்காட்டாப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டார்.

கனிஷ்ட போட்டியாளர்களான வி.தனரிகா காட்டா போட்டியில் தங்கப் பதக்கத்தினையும், பி.மதன்ராஜ் குமித்தே போட்டியில் தங்கப் பதக்கத்தினையும், ரி.ஜசஸ்ரன் காட்டா போட்டியில் தங்கப் பதக்கத்தினையும், ஆர்.சிமாஸ் குமித்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும் காட்டாப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

எஸ்.நவக்ஷான் காட்டாப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும், குமுத்தே போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும், எஸ்.கிதுர்ஜான் குமித்தே போட்டியில் வெண்களப் பதக்கத்தினையும் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் ராம் கராத்தே தோ சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

 

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை