ஊவா மாகாண சபையின் புதிய ஆளுநர் கடமையேற்பு

தென்மாகாண சபையின் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனும் கடமையேற்பு

ஊவா மாகாண சபையின் புதிய ஆளுநர்ஜனாதிபதி சட்டத்தரணி மார்ஷல் பெரேரா இன்று(14) கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இவர் ஊவா மாகாணத்தின் ஆறாவது மாகாண சபையின்நான்காவது ஆளுநராவார்.

ஊவா மாகாண சபையின் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கடமையேற்பு நிகழ்வில்முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக,பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாகாண சபை உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் ஆளுநருக்கு பொலிஸ்மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன் ஆளுநர் மாகாண சபைஅலுவலகத்தில்  மரக்கன்று ஒன்றையும்நட்டிவைத்தார்.

இதேவேளை ஊவா மாகாண சபைக்கு முன்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கீர்த்தி தென்னகோன் இன்று தென்மாகாண ஆளுநராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 (ஊவா வெல்லஸ்ஸ குரூப் நிருபர் - வஜிரா உமகிலிய)

Mon, 01/14/2019 - 15:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை