லேக்ஹவுஸ் கட்டடத்தில் ஜனாதிபதி நிதியம்

லேக்ஹவுஸ் கட்டடத்தில் ஜனாதிபதி நிதியம்-President Fund Shifted From Renuka Building to Lake House Building

நாளை ஜனவரி 18 முதல் இடமாற்றம்; ஜனவரி 21 முதல் வழமையான சேவை

ஜனாதிபதி மாவத்தையிலுள்ள ரேணுகா கட்டடத்தில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியமானது நாளை (18) முதல் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள லேக் ஹவுஸ் நிறுவன கட்டடத்தில் இயங்கவுள்ளது.

அதற்கமைய, இலக்கம் 41, ரேணுகா கட்டடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியம் நாளை (18) முதல் இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டடம், டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரியில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

விரிவான, வினைத்திறனான மக்கள் சேவையை வழங்குவதற்காகவும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்குடனும் ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளைய தினம் (18) சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் ஜனாதிபதி நிதியம் தங்களது வருத்தத்தை அறிவித்துள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனவரி 21ஆம் திகதி முதல் வழமைபோல் ஜனாதிபதி நிதியத்தின் சேவை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதுடன், நிதியத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 011- 2331245, 011 - 2431610, 011 - 2382316 ஆகிய இலக்கங்களினூடாக ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்புகொள்ளலாம்.

Thu, 01/17/2019 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை