தாய்லாந்து அகதிகள் கொள்கையில் தளர்வு

தாய்லாந்து அகதிகள் தொடர்பான அதன் கொள்கைகளைச் சற்றுத் தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகதிகள் சொந்த நாட்டுக்குத் திரும்பும்படி வலியுறுத்தப்படமாட்டார்கள் என்று தாய்லந்துக் குடிநுழைவுத்துறைத் தலைவர் கடந்த புதனன்று உறுதியளித்தார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் தொடர்பான உடன்படிக்கையில் தாய்லாந்து கையொப்பமிடவில்லை. நீண்ட காலமாகவே, அடைக்கலம் தேடுவோரைத் தடுத்துவைப்பது அல்லது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது அதன் வழக்கம்.

அண்மையில், சவூதி அரேபியாவைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண்ணின் கோரிக்கையைப் தாய்லாந்து மறுத்த விவகாரம் உலகின் கவனத்தை ஈர்த்தது.

18 வயது ரஹாவ் முஹமது அல்-குனுௗனிக்குப் பின்னர் கனடா அடைக்கலம் தந்தது. அந்த விவகாரம் தொடர்பில் உலகின் குறைகூறலுக்கு உள்ளான தாய்லாந்து, தற்போது மாற்றம் குறித்து அறிவித்துள்ளது.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை