கொங்கோ ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

கடும் போட்டி நிலவிய கொங்கோ ஜனநாயக குடியரசு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் பெலிக்ஸ் ஷிஷ்கிடி வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனினும் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள மற்றொரு எதிர்க்கட்சி வேட்பாளரான மார்டின் பயுலு, இதனை ‘தேர்தல் சதி’ எனக் கூறி முடிவை ஏற்க மறுத்துள்ளார்.

18 மில்லியன் வாக்குகள் பதிவான தேர்தலில் ஷிஷ்கிடி 38.57 வீத வாக்குகளை வென்றதாக தேர்தல் ஆணையம் நேற்று அதிகாலை 3 மணிக்கு செய்தியாளர் மாநாட்டை கூட்டி அறிவித்துள்ளது. பதற்றத்தை தணிக்கவே இந்த நேரத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 தினங்களுக்குள் ஷிஷ்கிடியின் வெற்றியை அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்தால் 1960இல் பெல்ஜியத்திடம் இருந்து கொங்கோ சுதந்திரம் பெற்ற பின் ஆட்சியை பிடித்த முதல் எதிர்க்கட்சி வேட்பாளராக பதிவாவார்.

18 ஆண்டுகள் பதவியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ஜோசப் கபிலா பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 01/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை