சகலருக்கும் தூய குடிநீரைப் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

நாடெங்கும் பரவலாக காணப்படும் சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்களை பலப்படுத்தி கஷ்டப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், சகலருக்கும் தூயகுடிநீர் என்னும் நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கும் துரித நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உலக வங்கியின்உதவியுடன் திணைக்களத்தின் வெளிக்களஉத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வண்டிகளை வழங்கி வைக்கும் வைபத்தின் போதுஉரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வைபவத்தின் போது 25மாவட்டங்களில் பணி புரியும் 50அதிகாரிகளுக்குமோட்டார் சைக்கிள்கள்இலவசமாக வழங்கி வைத்ததுடன் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களும் 2இலட்சத்து 25ஆயிரம்பெறுமதியுடையதாகும்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேசிய நீர் வழங்கல் திணைக்களம் எமது அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும்.அதனை மேலும் வளப்படுத்தி சமூகத்திற்கு பரவலான சேவையை வழங்குவதற்கு வசதியாக மாவட்டஅலுவலகங்களை அபிவிருத்தி செய்து வருகிறோம். மேலும் இத் திணைக்களத்தின் மூலம் கிராமமட்டத்தில் செயற்படும் சமூக நீர் வழங்கல் அமைப்புகளை பலப்படுத்துவதற்காக தொடர்ந்தும் பலவிதநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு பூராகவும் சுமார் 6000சமூக நீர் வழங்கல் திட்டங்கல் செயற்பட்டு வந்த போதிலும், கோடை காலங்களில் சில பகுதிகளில் நீர் மூலங்களில் ஏற்பட்டுவரும் நீர் பற்றாக்குறைகாரணமாக செயலற்று போவதையும் அவதானிக்க முடிகின்றது.

சகலருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் மிலேனியம் அபிவிருத்தி இலக்கைஅடைவதற்கு இக்கருத்திட்டங்களை பலப்படுத்துவதன் மூலம் சாத்தியமாகலாம் என நினைக்கின்றேன்.

எமது பிராந்திய அலுவலகங்ளுக்கு வாகன வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் திரைசேறியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்களை வழுப்படுத்துவதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும்வடிகாலமைப்பு சபையின் மூலம் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கவும்நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

பாரிய குடிநீர் விநியோக திட்டங்களுக்கு உட்படாத பிரதேசங்களை இனங்கண்டு கஷ்டப் பிரதேசமக்களின் அவலங்களை கவனத்திற்கொண்டு சமூக நீர் வழங்கல் அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலம்இந்நீர் வழங்கல் திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றோம்.

 சமூக அடிப்படையிலான அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் அவர்களின்முதலீடுகளுக்கு உதவி வழங்கும் நோக்கில் உலக வங்கியினூடாக கடன் திட்டமொன்றைஉருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்காக எமது சனத் தொகையில் 35 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு சமூக நீர் வழங்கல் திட்டகளின் மூலம் சுத்தமான குடிநீரைபெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இவ்வைபவத்தில்நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.தௌபீக், நகர திட்டமிடல், நீர் வழங்கல்மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, அமைச்சின் மேலதிகசெயலாளர் ஏ.சி.எம்.நபீல்மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tue, 01/08/2019 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை