ஐ.அ.இ பாலின சமத்துவ விருதில் ஆண்கள் மாத்திரம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாலின சமத்துவத்திற்கான விருது ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருப்பது சமூகதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது.

டுபாயின் ஆட்சியாளர் ஷெய்க் முஹமது பின் ரஷித் பாலின சமத்துவத்திற்கு பாடுபட்டவர்களை பாராட்டும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பத்தில் பெண்கள் மையமாக உள்ளனர்” என்று ஷெய்க் உரை நிகழ்த்தி இருந்தார். எனினும் அந்த நிகழ்வில் பெண்களை காணவில்லை என்று ட்விட்டர் பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“இங்கு உண்மையில் சமத்துவம் இருக்கிறது. அந்த ஆண்களில் ஒருவர் சாம்பல் நிற ஆடை அணித்துள்ளார்” என்று ஒரு ட்விட்டர் பயனர் கேலி செய்துள்ளார். “உங்களுக்கு நான் ஒன்றை கூறுவதை இட்டு வருந்துகிறேன். நீங்கள் பெண்களை அழைக்க மறந்துவிட்டீர்கள்” என்று மற்றுமொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நையாண்டிகளை அடுத்து டுபாய் அரச ஊடகம் பெண்களும் உள்ளடக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்விட் செய்துள்ளது.

உலக பாலின இடைவெளி தொடர்பிலான தரப்படுத்தலில் 149 நாடுகளில் ஐக்கிய அரபு இராச்சியம் 121 ஆவது இடத்தில் உள்ளது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை