லக்கலயின் எழுச்சி புதிய நகரம் நாளை மக்களிடம் கையளிப்பு

மொரகஹகந்த- - களுகங்கை திட்டத்தில் நீரில் மூழ்கிய லக்கல நகரத்திற்கு பதிலாக புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நகரம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

நவீன வசதிகளைக் கொண்ட புதிய லக்கலை நகரம் லக்கலையின் எழுச்சி என்ற செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அது நாளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், விளையாட்டு மைதானம், பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை, வீதி கட்டமைப்பு உட்பட அரச நிறுவனங்களின் கட்டடங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மகாவலி பாரிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி நீர் திட்டமான மொரகஹகந்த- களுகங்கை நீர்த் தேக்கத்திட்டத்தில் அணைக்கட்டும் நாளை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. மேற்படி நீர்த் தேக்கத் திட்டத்திற்கு 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 3000 குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியேற்று நான்கு வருடங்களை பூர்த்தி செய்யும் நாளை முன்னிட்டு லக்கல புதிய நகரம் நிர்மாணிக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Mon, 01/07/2019 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை