அவுஸ்திரேலிய பகிரங்கம்: காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் முதனிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் முதனிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.

இந்த போட்டி செரீனாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டை செரீனா 1-6 என எளிதில் இழந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட செரீனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-–4 எனவும், 3-வது செட்டை 6-–4 எனவும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

முதனிலை வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதால், சாம்பியன் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையில் செரீனா உள்ளார்.

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை