பிலிப்பைன்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பு

பிலிப்பைன்ஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பொறுப்பேற்றுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

தாக்குதல்தாரிகள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய அபு சையாப் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவங்களில் 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். ஜோலோ தீவின் சூலு வட்டாரத் தேவாலயத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முதல் குண்டு வெடித்தது. சம்பவ இடத்துக்குப் பாதுகாப்புப் படையினர் விரைந்தபோது, இரண்டாவது குண்டு தேவாலயத்திற்கு வெளியே வெடித்தது.

அதில் பொதுமக்களுடன், இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தாக்குதல்களுக்குக் காரணமானோர் அழிக்கப்படுவர் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கம் சூளுரைத்துள்ளது. இராணுவம் முழு விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரோட்ரிகோ டுடார்ட்டே சம்பவ இடத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை