ஓரினச்சேர்க்கையாளரை பேட்டி கண்டவருக்கு ஓர் ஆண்டு சிறை

ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரை கடந்த ஆண்டு நேர்காணல் செய்த எகிப்து நாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓர் ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.  

தனக்கு சொந்தமான எல்.டீ.சி தொலைக்காட்சி சேவையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்ததற்காக 3,000 எகிப்து பெளண்ட்களையும் கீசா நீதிமன்ற முஹமது அல் கிட்டி என்ற அந்த தொகுப்பாளருக்கு அபராதமாக விதித்துள்ளது.  

தனது அடையாளத்தை மறைத்த அந்த ஓரிச்சேர்க்கை ஆடவர், தனது பாலியல் தொழில் வாழ்வைப் பற்றி அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். 

எகிப்தில் ஓரினச்சேர்க்கை வெளிப்படையான குற்றம் இல்லை என்றபோதும், அவர்கள் மீதான நடவடிக்கையை நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.  

இவ்வாறானவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் எகிப்து பொலிஸார் அவர்கள் மீது ஒழுக்கக்கேடு, தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

2017 ஆம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பல ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் வானவில் கொடி அசைக்கப்பட்டதை அடுத்து பல டஜன் பேர் கைது செய்யப்பட்டனர்.      

Wed, 01/23/2019 - 12:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை