ஆசிய கால்பந்தாட்ட தலைமை அதிகாரியாக அநுர டி சில்வா நியமனம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆசியகிண்ண கால்பந்தாட்டத்தின் போது சார்ஜாவில் நடைபெறும் போட்டிகளுக்கான தலைமை அதிகாரியாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்துள்ள 17ஆவது ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் கடந்த 5ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. 24 ஆசியநாடுகள் பங்குபற்றியுள்ள இம்முறைபோட்டிகள் தொடர்ந்து 4 வாரங்களுக்குநடைபெறவுள்ளதுடன், இதன் இறுதிப் போட்டிஎதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிநடைபெறவுள்ளது.

பிபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற உலகின் இரண்டாவதும்,பழைமையும் வாய்ந்த கால்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்றாக ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் விளங்குகின்றது.

இத்தொடரில் ஜப்பான் அணி நான்கு தடவைகள் (1992, 2000, 2004 மற்றும் 2001) சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன்,நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா,ஈரான்,சவுதிஅரேபியா ஆகியநாடுகள் இம்முறைபட்டத்தைவெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இதன்படி, இம்முறை ஆசிய கிண்ணப் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் டுபாய்,அபுதாபி,சார்ஜா உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் 6 போட்டிகள் சார்ஜாவில் நடைபெறவுள்ளதுடன், இதன் ஏற்பாட்டுக் குழுவின் தலைமைஅதிகாரியாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா செயற்படவுள்ளார்.

முன்னதாக கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற,சிரியா மற்றும் பலஸ்தீன அணிகளுக்கிடையிலானபோட்டியில் அவர் தலைமை அதிகாரியாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரான அநுர டி சில்வா, 2008 முதல் இலங்கை கால்பந்தாட்ட நிர்வாகத்தில் இணைந்து கொண்டு பலபொறுப்புகளில் கடமையாற்றியுள்ளார்.

தற்போது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராகசெயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அவர்,ஆசிய கால்பந்தாட்டசம்மேளனத்தின் அபிவிருத்தி குழு உறுப்பினராகவும்,தெற்காசிய கால் பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இம்முறை ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் தலைமை அதிகாரியாக செயற்படகிடைத்தமைதொடர்பில் கருந்து வெளியிடுகையில், இம்முறைபோட்டிகளில் தலைமை அதிகாரியாக செயற்படகிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இது இலங்கைக்கும், எனக்கும் பெருமைக்குரிய விடயமாகும். மிக விரைவில் இலங்கை அணியை ஆசிய கிண்ணத்தில் பங்குபறச் செய்வதே எனது நோக்கமாகும். இதற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன். எனக்கு இந்தப் பதவி கிடைத்தை பொறுக்க முடியாத ஒரு சிலர், அதை தவறான முறையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(பீ.எப் மொஹமட்)

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை