பெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர் பெடரர், மரின் சிலிக், மகளிர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்லோன் ஸ்டீபென்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறியுள்ளனர்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான பெடரர் தற்போது 7ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். முதல் சுற்றில் டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்திய அவர், இரண்டாம் சுற்றில் 7–6 , 7–6, 6–3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் டேன் இவான்ஸை போராடி வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். 2 மணி நேரம் 35 நிமிடங்கள் போராடி இந்த வெற்றியைப் பெற்றார்.

முழங்கை வலியால் அவதிப்பட்டு வரும் உலகின் 5ஆம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சன் 4–6, 6–4, 6–4, 7–5 என்ற செட் கணக்கில் அமெரிக்க இளம் வீரர் பிரான்ஸஸ் டியாபோவிடம் 2ஆம் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

2ஆம் நிலை வீரர் நடால் 6–3. 6–2 6–2 என்ற செட் கணக்கில் எப்டனை வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னறினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மெக்ஸிகன் ரெயஸ் வரேலா இணை 5–7, 6–7, என்ற செட்கணக்கில் ஆஸ்டின் –ஆர்டெம் இணையிடம் தோல்வியுற்று வெளியேறினர்.

மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், வோஸ்னியாக்கி, பெட்ரா விட்டோவா, ஸ்லோன் ஸ்டீபன்ஸும் முன்னேறினர்.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை