மன்னார் 'சாயிட் சிட்டி' கிராமம் அங்குரார்ப்பணம்

RSM
மன்னார் 'சாயிட் சிட்டி' கிராமம் அங்குரார்ப்பணம்-Sheikh Zayed City-Mannar Inaguration

120 வீடுகள் அமைக்கப்பட்டு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் திறந்து வைப்பு

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகள்  இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் 'சாயிட் சிட்டி' கிராமம் அங்குரார்ப்பணம்-Sheikh Zayed City-Mannar Inaguration

மன்னார்  - தலை மன்னார் பிரதான வீதி இரண்டாம் கட்டை பகுதியில் 120 வீடுகளுடன் அமைக்கப்பட்ட, சாயிட் சிட்டி எனும் பெயருடனான கிராமமே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு 120 வீடுகள், பொது மண்டபம் மற்றும் பள்ளிவாசல் என்பன என்பன திறந்து வைக்கப்பட்டதோடு, 120 வீடுகளும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் துபாய் நாட்டின்   தனவந்தர் 'அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா' மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து நேற்று திறந்து வைத்ததோடு, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த வீடுகள் கையளிக்கப்பட்டன.

மன்னார் 'சாயிட் சிட்டி' கிராமம் அங்குரார்ப்பணம்-Sheikh Zayed City-Mannar Inaguration

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் மீள் குடியேறாத நிலையில் காணப்பட்ட  சுமார் 120 முஸ்ஸிம் குடும்பங்களுக்கு துபாய் நாட்டின் தனவந்தர் 'அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா' அவர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

மன்னார் 'சாயிட் சிட்டி' கிராமம் அங்குரார்ப்பணம்-Sheikh Zayed City-Mannar Inaguration

குறித்த நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், துபாய் நாட்டின் தனவந்தர் தலைமையிலான குழுவினர், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன், அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம். முனவ்வர், மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் 'சாயிட் சிட்டி' கிராமம் அங்குரார்ப்பணம்-Sheikh Zayed City-Mannar Inaguration

(மன்னார் குறூப் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)

Fri, 01/11/2019 - 17:12

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை