சீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்

தாய்வான் மீதான சீனாவின் அணுகுமுறையை உன்னிப்பாக கவனித்துவருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இராணுவ பலத்தைப் பயன்படுத்தித் தாய்வானைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா முனையலாம் என்ற கவலை எழுந்துள்ளதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனா அவ்வாறு நடவடிக்கை எடுக்காது என்று அமெரிக்கா நம்புவதாகவும், இருப்பினும் அதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

சீனா தொடர்ந்து அதன் இராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வார முற்பகுதியில், தாய்வான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் பயணம் செய்தது சினமூட்டும் செயல் என்று சீனா எச்சரித்திருந்தது.

தாய்வானுடன் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ உறவுகள் இல்லாதபோதும், தாய்வான் தன்னைத் தற்காத்துக்கொள்ள அமெரிக்கா உதவும் என்று கூறிவருகிறது.

தாய்வான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டைச் சகித்துக்கொள்ள முடியாது என்று சீனா மீண்டும் எச்சரிக்கைவிடுத்தது.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை