ஈரானுக்கு உளவு பார்த்ததாக இஸ்ரேல் அமைச்சர் ஒப்புதல்

ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் கொனென் செகெவ் 11 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

1995 தொடக்கம் 1996 வரை இஸ்ரேலின் சக்திவலு அமைச்சராக இருந்த செகெவ் மீது கடந்த ஜுன் மாதம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. நைஜீரியாவில் வாழ்ந்து வந்த அவர் ஈரானின் உளவாளியாக செயற்பட்டதாக இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

2012 இல் நைஜீரியாவுக்கான ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்திருக்கும் செகெவ் இரண்டு முறை ஈரானுக்கும் சென்றிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

செகெவ் மீதான சிறைத் தண்டனைக்கு நீதிமன்றம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனினும் மருத்துவரான அவர் ‘எக்ஸ்டசி’ மாத்திரைகளை சிறைக்குள் கொண்டு செல்ல முயற்சி செய்ததற்காக 2004 ஆம் ஆண்டும் சிறை தண்டனைக்கு முகம்கொடுத்தார். சிறையில் இருந்து விடுதலையான பின் அவர் 2007 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த மே மாதம் அகுவாடோரியல் கினியாவுக்கு பணயித்தபோதே செகெவ் கைது செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை