ஸ்பெயின் விமானநிலையத்தில் உரிமையாளர் இன்றி விமானம்

ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட், பரஜாஸ் விமானநிலையத்தில் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருக்கும் விமானம் ஒன்றின் உரிமையாளரை விமானநிலைய அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக நகர்த்தப்படாத நிலையில் இருந்து வரும் மக்டொன்னல் டொக்லஸ் எம்.டி.87 விமானத்தின் உரிமையாளரை கண்டிறியக் கோரி அந்நாட்டு உத்தியோகபூர் வர்த்தமானியிலும் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்டிருக்கும் இந்த விமானம் முன்னதாக ஸ்பெயின் சாட்டர்ட் விமான சேவைக்கு சொந்தமாக இருந்ததோடு 2008 ஆம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருப்பதாக ஸ்பெயின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு பின்னர் செய்கர்ஸ் ஏர் விமான சேவையில் ஒரு சரக்கு விமானமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த விமான சேவை 2010 ஆம் ஆண்டு திவாலானது. இந்நிலையில் இந்த விமானத்திற்கு யாரும் உரிமை கோராமல் போனால்் அது பொது ஏலத்தில் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை