பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி

பங்களாதேஷ் பிரீமியர் டி-20 லீக்கில் திசர பெரேராவின் அதிரடியையும் தாண்டி சிட்டகொங் வைகிங்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.

நியூசிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்துக்குப் பிறகு இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் முதல்போட்டியில் களமிறங்கிய இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரா,எதிரணி பந்து வீச்சாளர்களை வெளுத்துவாங்கி 26 பந்துகளில் 74 ஓட்டங்களைக் குவித்துஅசத்தியிருந்தார்.

ஆறாவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. டாக்காவில் (13) நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் இம்ருல் கைஸ் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் - முஸ்பிகுர் ரஹீம் தலைமையிலான சிட்டகொங் வைகிங்ஸ் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற சிட்டகொங் அணிமுதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக களமிறங்கிய தமீம் இக்பால் (0),ஈவின் லூவிஸ் (38),லையம் டோசன் (2), இம்ருல் கைஸ் (24),சஹீட் அப்ரிடி (2) ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் அவ்வணி, 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துதடுமாறியது.

எனினும்,ஏழாவது விக்கெட்டுக்காக மொஹமட் சபியுடீனுடன் ஜோடி சேர்ந்த திசர பெரேரா,எதிரணிபந்து வீச்சை திணறடித்து அதிரடிஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இம்முறைபோட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவீரர்களில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ரொபிப்ரைலின்க் வீசிய 19ஆவது ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசிய திசர பெரேரா,குறித்த ஓவரில் (2,6,6,4,6,6) 30 ஓட்டங்களைக் குவித்ததுடன், 20 பந்தில் தனது அரைச் சதத்தையும் கடந்தார். மொத்தம் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 26 பந்துகளில் ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களை வெளுத்துக் கட்டினார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்த திசர பெரேராதன் வாழ் நாளின் ருத்ர தாண்டவ ஒருநாள் இன்னிங்ஸை விளையாடி, 57 பந்துகளில் சதம் கடந்து,மொத்தம் 13 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களைக் குவித்தார். அதேபோல பல முக்கிய சாதனைகளையும் அவர் அந்தப் போட்டித் தொடரில் நிகழ்த்தியிருந்தார்.

திசர பெரோ இறுதியாக விளையாடிய 4 இன்னிங்ஸிலும், 27 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 337 ஓட்டங்களைக் குவித்துள்ளமை மற்று மொருசிறப்பம் சமாகும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கொமிலா விக்டோரியன்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பின்னர் 185 ஓட்டங்கள் வெற்றிஎன்ற இலக்குடன் சிட்டகொங் வைகிங்ஸ் அணிகளம் இறங்கியது. தொடக்கவீரர்களான மொஹமட் ஷெசாத் மற்றும் கெமரன் டெல்போர்ட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அரைச் சத இணைப்பாட்ட மொன்றைப் பெற்றுக்கொடுத்தனர். இதில் டெல்போர்ட் (13),மொஹமட் ஷெசாத் அடுத்தடுத்து வெளியேறினார்கள். அதன்பின் வந்தவீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க,அவ்வணி நெருக்கடிக்கு உள்ளாகியது. எனினும்,நான்காவது வீரராகக் களமிறங்கிய முஸ்பிகுர் ரஹீமின் அபாரதுடுப்பாட்டத்தின் உதவியுடன் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

சிட்டகொங் வைகிங்ஸ் அணிக்காக துடுப்பட்டத்தில் பிரகாசித்த முஸ்பிகுர் ரஹீம், 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கலாக 41 பந்துகளில் 75 ஓட்டங்களைக் குவித்ததுடன்,போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

(பீ.எப் மொஹமட்)

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை