பனிக்கட்டி உலகின் முதல் புகைப்படம் வெளியானது

பூமியில் இருந்து நான்கு பில்லியன் மைல்களுக்கு அப்பால் பயணிக்கும் நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் தொலைதூர பனிக்கட்டி உலகமான அல்டிமா துலேவின் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.

இரு உடல்கள் இணைக்கப்பட்ட 31 கிலோமீற்றர் நீளமான இந்த விண்பொருள் பனிமனிதன் போன்று தோற்றமளிக்கிறது.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன் புளூட்டோ குறுங்கோளின் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ் விண்கலம், மர்மமானதாக இருந்து வந்த விண் பொருளை புத்தாண்டு தினமன்று நெருக்கமாக கடந்து சென்றது. இது புளூட்டோவை கடந்து ஒரு பில்லியன் கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் என்பதோடு பூமியில் இருந்து 6.4 பில்லியன் கிலோமீற்றர்களாகும்.

இந்நிலையில் அல்டிமா துலேவின் புகைப்படம் கடந்த புதன்கிழமை வெளியானது.

இந்த இரு உடல்களும் மிக மெதுவாக வந்து, சிலவேளை மணிக்கு 2–3 கிலோமீற்றர் வேகத்தில் வந்து ஒன்றிணைந்திருக்கக் கூடும் என்று நாசாவின் அமேஸ் ஆய்வு மையத்தில் இருந்து நியூ ஹொரைசன்ஸின் இணை ஆய்வாளர் ஜேப் மூர் குறிப்பிட்டார்.

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை