வெனிசுவேல அரச எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா தடை

வெனிசுவேல அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் மீது தடை விதித்திருக்கும் அமெரிக்கா நாட்டில் அமைதியான ஆட்சி மாற்றத்தை ஏற்கும்படி இராணுவத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மற்றும் அவர்களது கூட்டாளிகள் “தொடர்ந்து வெனிசுவேல மக்களின் சொத்துகளை திருட முடியாது” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.

மடுரோவை பதவி கவிழ்க்கும் எதிர்க்கட்சியின் முயற்சிகள் அண்மைய தினங்களில் அதிகரித்துள்ளன. அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை அந்நாட்டு இடைக்கால ஜனாதிபதியென அங்கீகரித்துள்ளன.

மடுரோ அரசிடம் இருந்து வெனிசுவேல நாட்டு எண்ணெயை கொள்வனவு செய்யும் செயல்முறை தடுக்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டிவ் ம்னுசின், அந்த எண்ணெய் நிறுவனம் குவைடோவை ஏற்பதன் மூலம் தடையை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வெனிசுவேலா தனது எண்ணெய் வருவாயில் அமெரிக்காவில் பெரிதும் தங்கியுள்ளது. அந்த நாடு தனது எண்ணெய் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு 41 வீதத்தை அனுப்புகிறது. அமெரிக்காவுக்கு மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நான்கு முன்னணி நாடுகளில் வெனிசுவேலாவும் ஒன்றாகும்.

வெனிசுவேல எண்ணெய் நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவனமான சிட்கோவை பாதுகாப்பதற்கு அமெரிக்காவில் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவும் மடுரோ உத்தரவிட்டுள்ளார். எனினும் வெனிசுவேல எண்ணெய் நிறுவனத்திற்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க தாம் உத்தரவு பிறப்பித்ததாக குவைடோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மடூரோ அரசுக்கு ரஷ்யா, சீனா, மெக்சிகோ மற்றும் துருப்பி நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், வெனிசுவேலாவில் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை