எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி!

'வாஷிங்டனுக்குச் செல்லாமல் இந்த அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வர முடியாது' என்கிறார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன.

கேள்வி : நீங்கள் முன்னாள் கல்வியமைச்சர். சர்வதேச பாடசாலைகளை ஆரம்பிக்க கர்த்தாவாகவும் செயல்பட்டீர்கள். ஆனால் சர்வதேச பாடசாலை பிள்ளையொருவர் கலைப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது குறித்து ஏன் இவ்வளவு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்கள்?

பதில் : எனது வாழ்க்கையில் நான் அந்தப் பாடசாலையை நடத்த எண்ணவே இல்லை. நான் அப்போது அரச பாடசாலைகள் பிள்ளைகள் பக்கம்தான் சார்ந்திருந்தேன். இலங்கையில் கல்வியமைச்சராக சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பொறுப்பு அரச பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதாகும். உயர்தரப் பரீட்சை போன்ற தீர்க்கமான பரீட்சை முடிவுகளின்படியே சாதனை சுட்டி தயாரிக்கப்படுகின்றது. அதனைத் தயாரிக்கும் போது இரண்டு பிரிவினர் உள்ளார்கள். பாடசாலை விண்ணப்பதாரிகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரிகள்.

தற்போது பாடசாலை விண்ணப்பதாரிகள் மூலமாகவே சாதனை சுட்டி தயாரிக்கப்படுகின்றது. அரச பாடசாலை மாணவர்கள் மாத்திரமே அதில் உள்ளடக்கப்படுகின்றார்கள். அரச பாடசாலைகள் இரண்டு வகைப்படும். அரச பாடசாலைகள் மற்றும் கல்வியமைச்சின் அனுமதி பெற்ற அரச பாடசாலைகள். இப்பாடசாலைகள் குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. சர்வதேச பாடசாலை பெறுபேறு மதிப்பீட்டில் முதலிடம் பெற்றவர் என போடப்பட்டால் எனக்குக் காட்டுங்கள்.

அது எமக்கு தொடர்புடையதல்ல. சர்வதேச பாடசாலைகளின் பெறுபேறுகளை போடுவதற்கா கல்வி அமைச்சு உள்ளது? கல்வி அமைச்சு அரசு பாடசாலைகளைப்பற்றியே பார்க்க வேண்டும். அவர்கள் 45 இலட்சம் பேர் கல்வி கற்கும் அரச மாணவர்கள் புறமிருந்தே நோக்க வேண்டும். சர்வதேச பாடசாலை என்பது அரசு அனுமதிக்காத தனியார் வியாபாரமாகும். தனிப்பட்ட முறையில் செயல்பட யாருக்கும் முடியும். அரச கல்வியை நடத்திச் செல்ல நான் மேலதிக வகுப்புகளையும் நடத்தியுள்ளேன்.

கேள்வி : ஸ்ரீல.சு.கட்சிக்குள்ளே மோதல் நிலைமை தோன்றியுயள்ளதல்லவா? இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றீர்கள்?

பதில் : நாம் உடனடியாக தேர்தலுக்குச் செல்வோம் என்றே கூறுகின்றோம். பிரச்சினை உள்ளதென்றால் அவர்கள் செல்ல வேண்டியது தேர்தலுக்கேயாகும். தேர்தலுக்குச் சென்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதாகும்.

கேள்வி : ஸ்ரீல.சு. கட்சியாகவோ பொதுஜன எக்ஸத் பெரமுனவாகவா தேர்தலில் போட்டியிட எதிரபார்த்துள்ளீர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் வேறொரு கூட்டணியை அமைத்து போட்டியிடப் போகின்றீர்களா?

பதில் : கூட்டணியொன்றின் மூலம் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜீ.எல். பீரிஸ் தலைமை பொதுஜன எக்ஸத் பெரமுன, விமல் வீரவங்ச தலைமை தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஏகாதிபத்திய விரோத அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரே முகாமிலேயே உள்ளோம்.

கேள்வி : பொதுஜன எக்ஸத் பெரமுன என்ற ஒன்றில்லை. அங்கத்தவர்கள் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வீழ்ச்சிடைந்துள்ளது. கட்சிக்குள்ளே மோதலுள்ளதாக அரசாங்கக் கட்சி அமைச்சர்கள் கூறுகின்றார்களே?

பதில் : இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்காமல் தங்களுக்கு சாதகமான நிலைமை காணப்படும் போது தேர்தலை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். அதன் பின்னர் எங்களால் காட்ட முடியும், கட்சியுள்ளதா இல்லையா என்று. ஸ்ரீல. சுதந்திரக் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதா என்று தெரியும். அரசாங்கம் எம்மை வெற்றி பெறச் செய்யத் தேவையில்லை. அவர்களுக்கு இது நல்ல நேரம் என்றால் அவர்கள் தற்போது தேர்தலை நடத்தலாம். நாம் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் எந்த கட்சியில் போட்டியிட்டாலம் எங்களுக்கு வாக்குகள் கிடைக்கும். கட்சிக்குள்ளே மோதல் உள்ளது என்றால் தேர்தலுக்கு சென்று பாருங்கள்.

கேள்வி : இது தேர்தல் வருடம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அதற்கு நீங்கள் தயாரா?

பதில் : நாம் தற்போது தொகுதிகளை பலப்படுத்தி வருகின்றோம். பரந்த முன்னணியாக தேர்தலுக்குச் செல்ல இலங்கையில் அதிகளவு வாக்குளை பெற்றுத் தரும் தேர்தல் தொகுதியாக நான் எனது பிரதேசத்தைப் பலப்படுத்துவேன்.

சுபத்ரா தேசப்பிரிய
(சிலுமின)

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை