ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை :

இந்திய அணிக்கு இம்ரான் கான் வாழ்த்து

அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணிக்கும், தலைவர் விராட் கோலிக்கும் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

சாதனை படைத்த இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தவரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும் ஆன இம்ரான் கான் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணி அவுஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்காக விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை