சிரியாவில் ஜிஹாதிக்களுடன் கிளர்ச்சியாளர் கடும் மோதல்

வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாத் போராளிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கு அலெப்போ மாகாணத்தில் கிளர்ச்சி கூட்டணி மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹயாத் அல் தஹ்ரிர் அல் ஷாம் கூட்டணிக்கு இடையிலேயே மோதல் வெடித்துள்ளது. நூருத்தீன் அல் சிங்கி கிளர்ச்சிக் குழு தமது போராளிகள் ஐவரை கொன்றதாக குற்றம்சாட்டி இருக்கும் ஜிஹாத் கூட்டணி, கிளர்ச்சியாளர் நிலை மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

துருக்கி ஆதரவு கிளர்ச்சி கூட்டணியான தேசிய விடுதலை முன்னணியில் நூருத்தீன் அல் சிங்கி முக்கிய பங்கு வகிக்கிறார். மறுபுறம் சிரியாவில் அரச எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பிரதான நிலமான இத்லிப் மாகாணத்தின் பாதிக்கும் அதிகமான பகுதியில் ஜிஹாத் கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை