அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ; ஒசாகா, சுவிட்டோலினா கால்இறுதிக்கு தகுதி

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் நவ்மி ஒசாகா, எலீனா சுவிட்டோலினா ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நான்காம் நிலை வீராங்கனையான நவ்மி ஒசாகா (ஜப்பான்)- சுலெஸ்டானா (லாத்வியா) மோதினார்கள்.

இதில் ஒசாகா 4-–6, 6-–3, 6-–4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

கடந்த ஆண்டு அமெரிக்க பகிரங்க பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த முறை 4-வது சுற்று வரை நுழைந்ததே இதற்கு முன்பு சிறந்ததாக இருந்தது. ஒசாகா கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும். எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்சை 6-–2, 1-–6, 6-–1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

சுவிட்டோலினா தொடர்ந்து 2-வது முறையாக அவுஸ்திரேலிய பகிரங்க கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சுவிட்டோவா (செக்குடியரசு)- பேர்ட்டி (அவுஸ்திரேலியா), அனஸ்டசியா (ரஷ்யா)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை