உலகின் தனிமையான வாத்து நாய்கள் தாக்கி உயிரிழந்தது

தொலைதூர பசிபிக் தீவொன்றில் உள்ள உலகின் தனிமையான வாத்து என்று பெயர் பெற்ற வாத்து ஒன்று நாய்கள் தாக்கி கொல்லப்பட்டுள்ளது.

குட்டி நாடான நியு தீவில் வசிக்கும் ட்ரெவர் என்று உள்ளூர் மக்களினால் அழைக்கப்படும் இந்த வாத்து அந்த தீவில் வசிக்கும் ஒரே வாத்தாகும். அது 2018 ஆம் ஆண்டு வந்திருப்பதோடு, அது எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை.

வீதியோர குட்டை ஒன்றில் வசித்து வந்த இந்த வாத்தை ஊர் மக்கள் கவனித்து வந்துள்ளனர். “சூறாவளி ஒன்றை அடுத்து அதனை நியு தீவில் காண முடிந்தது. ஒருவேளை காற்றில் அடித்துவரப்பட்டிருக்கலாம்” என்று இந்த வாத்துக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றை செயற்படுத்தி வரும் ரே பின்ட்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாய்களால் தாக்கப்பட்ட நிலையில் இந்த வாத்தின் உடல் புதர் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நியு தீவு நியூசிலாந்தில் இருந்து வடகிழக்காக 2,400 கிலோமீற்றர் பரந்த சிறு தீவாகும்.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை