‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’

‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’-Vantha Rajavathaan Varuven-Red Cardu

ரெட் கார்டு | வந்தா ராஜாவா தான் வருவேன் | சிம்பு | ஹிப்ஹாப் தமிழா | சுந்தர் சி |லைக்கா

சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திலிருந்து முதல் சிங்கிள் ட்ரக் (Single Track) 'ரெட்கார்டு' வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க, மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துவருகின்றனர். இப்படத்தைத் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்துக்கு ஹிப்ஹொப் தமிழா இசையமைத்துள்ளார். 'எனக்கா ரெட் கார்டு' எனும் இப்பாடலை அறிவு எழுதியுள்ளதோடு,  சிம்பு பாடியுள்ளார்.

'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில், சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட விவகாரத்தில், எஸ்.டி.ஆருக்கு நடிக்க 'ரெட் கார்டு' (தடை) போடப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, இப்பாடலின் வரிகள் எழுதப்பட்டிருப்பது, சிம்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 

Sun, 01/20/2019 - 10:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை