நடாலை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் செர்பியாவின் முதனிலை வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.

ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6--3, 6--2, 6--3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை