அகில இலங்கை ரீதியிலான இரட்டையர் டேபிள் டென்னிஸ் சம்பியன்சிப்

இப்போட்டிகள் டிசம்பர் 21ம் திகதி கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கல்லூரியின் விளையாட்டு போட்டிகளின் தலைவர் சமிலா பெரேரா கலந்து கொண்டார்.  

போட்டி முடிவுகள் - 

10 வயதின் கீழ் ஆண்கள் இரட்டையர் 

கொழும்பு றோயல் கல்லூரியின் ஜனித் பட்டுகெதர மற்றும் லித்தும் கருணாசேன ஆகியோர் அம்பலங்கொடை  தர்மாசோக கல்லூரியின் ஹரீன் நிம்தினு மற்றும் மதிலா சஸ்தினு ஆகியோரைத் தோற்கடித்தனர்.  

11-06, 08-11, 11-08, 11-06 

10 வயதின் கீழ் பெண்கள் இரட்டையர் 

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் சந்தின்தி ஜயசிங்க மற்றும் நெலும்தி ஜயகொடி ஆகியோர் அம்பலங்கொடை தேவானந்தா கல்லூரியின் தாமதி காவிந்தியா மற்றும் பினூதி ஜயநுலா ஆகியோரைத் தோற்கடித்தனர்.  

11-05, 11-08, 11-08 

12 வயதின் கீழ் ஆண்கள் இரட்டையர் 

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ரெஹான் சேனநாயக்கா மற்றும் சலுக்க மதீஷா ஆகியோர் அம்பலங்கொடை தர்மாசோக கல்லூரியின்  ஹரீன் நிம்தினு மற்றும் ஹஷிர தினுசர ஆகியோரைத் தோற்கடித்தனர்.  

11-04, 06-11, 11-07, 10-12, 11-06 

12 வயதின் கீழ் பெண்கள் இரட்டையர் 

கேகாலை மகளிர் வித்தியாலயத்தின் நவிந்தி தனுஸ்க மற்றும் சமீஷ துஷாதி ஆகியோர் கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் சந்திந்தி ஜயசிங்க மற்றும் ஒனேலி லெஹன்சா ஆகியோரைத் தோற்கடித்தனர். 

09-11, 11-09, 11-08, 14-12 

15 வயதின் கீழ் ஆண்கள் இரட்டையர் 

அம்பலங்கொடை தர்மாசோக கல்லூரியின் சானுல் துல்சன் மற்றும் விஹந்து ரந்தின ஆகியோர் கேகாலை சென் மேரிஸ் கல்லூரியின் சானுக ஸ்ரீபண்டார மற்றும் கவிந்து குமுதான்ஜனா ஆகியோரைத் தோற்கடித்தனர். 

11-05, 11-07, 11-08 

15 வயதின் கீழ் பெண்கள் இரட்டையர் 

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் ரணுதி முததுகுடாராச்சி மற்றும் ஒனெலி லெஹன்சா ஆகி யோர் கேகாலை மகளிர் வித்தியாலயத்தின் நவிந்தி தனுஷ்க மற்றும் சமீஷ துஷாதி ஆகியோரை தோற்கடித்தனர்.  

11-09, 12-10, 09-11, 05-11, 11-09 

18 வயதின் கீழ் ஆண்கள் இரட்டையர் 

அம்பலங்கொடை தர்மாசோக கல்லூரியின் சனுல் துல்சன் மற்றும் விஹன்து ரன்தின ஆகியோர் கேகாலை சென் மேரிஸ் கல்லூரியின் சானுக ஸ்ரீபண்டார மற்றும் கவிந்து குமுதான்ஜன ஆகியோரை தோற்கடித்தனர்.  

11-07, 11-05, 05-11, 11-08 

18 வயதின் கீழ் பெண்கள் இரட்டையர் 

அம்பலங்கொடை தர்மாசோக கல்லூரியின் சந்துனி பிரபுத்திக மற்றும் இனுலி குணசேகர ஆகியோர் கிரிபத்கொடை விகாரமஹாதேவி மகளிர் வித்தியாலயத்தின் தரிந்தி தமாஷா மற்றும் கேகாலை மகளிர் வித்தியாலயத்தின் பிரபோதா மல்லவ ஆகியோரைத் தோற்கடித்தனர். 

11-09, 14-16, 11-05, 08-11, 11-06

(புத்தளம் விஷேட நிருபர்)

Mon, 01/07/2019 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை