சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை தடுக்க ஹொங்கொங்கில் சட்டம்

சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை ஹொங்கொங் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் போக்கிற்கு எதிரான அச்சத்தை ஏற்படுத்தும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

சீனா மீது தேசப்பற்றை மேலோங்கச் செய்வது இந்த சட்டமூலத்தின் நோக்கமாக உள்ளது.

சிறைத்தண்டனையைத் தவிர தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு அதிகபட்ச அபராதமாகச் சுமார் 6300 டொலர் விதிக்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கும் அந்தப் புதிய விதி பொருந்தும்.

இந்தச் சட்டமூலம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் வாக்கெடுப்புக்கு வரும்போது இலகுவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு போதுமாக இடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் சீன பிரதான நிலத்தில் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிராந்தியமான மகாவுவிலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை