டொனால்ட் டிரம்பின் பாராளுமன்ற உரைக்கு சபாநாயகர் முட்டுக்கட்டை

அமெரிக்க பாராளுமன்றத்துக்கு பதிலாக வேறோர் இடத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாம் உரையாற்றப் போவதாக ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் சில துறைகளில் நிலவும் முடக்கம் 33 ஆவது நாளை எட்டியுள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி டிரம்ப் அடுத்த செவ்வாய்க்கிழமை, பாராளுமன்றத்தில் வைத்து உறுப்பினர்களுக்கு உரையாற்ற முடிவெடுத்திருந்தார். ஆனால், சமாநாயகர் நான்சி பெலோஸி அதற்குத் தடை விதித்துள்ளார்.

அரசாங்க முடக்கம் நிலவும் வேளையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றக் கூடாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி உரையாற்றுவதற்கு, மிகப் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதால் அவர் உரையாற்றுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று திருவாட்டி பெலோஸி வலியுறுத்தியிருந்தார். ஆனால், தாம் உரையாற்றுவதில் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏதுமில்லை என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ஜனாதிபதி டிரம்ப் நிதி கோரி வருகிறார். ஆனால் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. அது தொடர்பில் முரண்பாடு நீடிக்கும் சூழலில், அரசாங்கத்தின் சில துறைகள் ஒரு மாதத்துக்கும் மேலாக முடங்கியுள்ளன.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை