பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய விசேட வேலைத் திட்டம்

AMF

சம்பா 1 கிலோ ரூ.41,  நாடு 1கிலோ ரூ.38

பெரும் போகத்தில் 18 மாவட்டங்களிலும் நெல்லை கொள்வனவு செய்யும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

2018 /2019 பெரும்போக நெல் அறுவடை பணிகள் ஆரம்பிக்கப்பட இருப்பதுடன் நெல்லுக்காக நிலையான விலையை முன்னெடுப்பதற்கும் விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நிகழ்ச்சி நிரலை 18 மாவட்டங்களில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்பா ரக நெல் 1 கிலோ கிராமிற்கு 41 ரூபாவுக்கும், நாடு ரக நெல் 1கிலோவிற்கு 38 ரூபாவுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்கமைவாக இம்முறை பெரும்போக நெல்கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு தேவையான நிதியை வழங்குவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 01/23/2019 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை