கோப்பி தாவரம் அச்சுறுத்தலில்

உலகில் அறியப்பட்ட 168 கோப்பித் தாவர வகைகளில் 60 வீதமானவை அழிவின் விளிம்பில் இருப்பதாக இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முழுமையான ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

100க்கும் அதிகமான கோப்பி தாவர வகைகள் காடுகள் இயற்கையாக வளர்வதோடு அதில் நாம் அருந்துவதற்கு பயன்படும் இரு கோப்பி தாவரங்களும் அடங்கும்.

இந்நிலையில் உலக அளவில் கோப்பி பயிரை காப்பற்றுவதற்காக காட்டுப்பகுதிகளில் இருக்கும் கோப்பி அச்சுறுத்தலை முகம்கொடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 75 காட்டு கோப்பி வகைகள் அழிவுக்கு உள்ளாகும் அச்சுறுத்திலில் இருப்பதோடு, 35 வகைகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அரபிகா மற்றும் ரொபுஸ்டா என்ற இரு கோப்பி இனங்களிலேயே உலக கோப்பி வர்த்தகம் தங்கியுள்ளது.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை